காரியாபட்டியில் கோடை உழவுத் திட்டம் அறிமுகம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், அரசும், டாஃபே நிறுவனமும் இணைந்து கோடை உழவுத் திட்டம் அறிமுகம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காரியாபட்டியில் கோடை உழவுத் திட்டம் அறிமுகம்
X

காரியாபட்டியில் கோடை உழவுத் திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு அரசு மற்றும் டாஃபே நிறுவனம் இணைந்து சிறு குறு விவசாயிகளுக்கு இலவச கோடை உழவு பயிற்சி தொடக்கம்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் டா பே நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து கொடுக்கும் திட்டத்தினை 2-வது முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் டா பே நிறுவனம் இணைந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள மேலத்துலுக்கங்குளம் கிராமத்தில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளது. இதில், 2 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு குறு விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டாவை இணைத்து பதிந்துவைக்க வேண்டும்.

முன்னுரிமை அடிப்படையில், பதிந்துவைத்தவர்களுக்கு உழவு செய்து கொடுக்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக தமிழகம் முழுவதும் 1லட்சம் ஹெக்டேர் மற்றும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 8000 ஹெக்டேர் நிலம் இலவசமாக உழவு செய்யப்பட்டது.

2-வது முறையாக 1,50,000 ஹெக்டேர் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 15,000 ஹெக்டேர் நிலமும் உழவு செய்ய திட்டமிட்டு மேலத்துலுக்கங்குளம் கிராமத்தில் தொடங்கப்பட்டது . இந்நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், வேளாண்மை பொறியியற் துறை செயல் பொறியாளர் சங்கர் ராஜ், பொறியாளர் உதயன், அருப்புக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் சகாயஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இலவச கோடை உழவு நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தனர்..

இதுகுறித்து மேலத்துலுக்கங்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் கூறும்போது:- தமிழக அரசும்,டாஃபே நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள இலவச கோடை உழவு செய்யும் இத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பதிந்து பயன்பெற வேண்டும். கோடை உழவு என்பதால் இத்திட்டம் இரண்டு மாதமே நடைபெறும். தமிழ் நாடு உழவன் செயலி அல்லது ஜே.பார்ம் செயலியை பதவிறக்கம் செய்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். உதவி எண்18004200100 ஆகும் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக[ ஆர்வலர் ரெங்கசாமி, நந்தி குண்டு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சீனிவாசன், மல்லாங்கிணறு காவலர் மணிகண்டன் ஆகியேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை , சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் சிறப்பாக செய்திருந்தார்.

Updated On: 3 Jun 2021 9:57 AM GMT

Related News