காதி கிராம தொழில் ஆணையத்தின் காதிபவன்: விருதுநகரில் கலெக்டர் திறப்பு

மதுரை மண்டலத்தின் சர்வோதயா சங்கங்களின் விற்பனை இலக்காக ரூ.82 கோடி நிர்யிணக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காதி கிராம தொழில் ஆணையத்தின் காதிபவன்: விருதுநகரில் கலெக்டர் திறப்பு
X

 விருதுநகர்-அருப்புக்கோட்டை  பிரதான சாலையில் காதி கிராமோத்யோக் பவனை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை - விருதுநகர் பிரதான சாலையில் காதி கிராமோத்யோக் பவனை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: இந்தியா பெரும்பான்மையாக கிராமங்களை கொண்ட நாடு ஆகும். இந்தியாவில் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாகும். கிராமப்புறங்களில் கிராம தொழில்கள் மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி அடிகள் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் 1957-ல் உருவாக்கப்பட்டது.

இதன் முக்கிய நோக்கம் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவது. கதர்கிராம தொழில்கள் ஆணையத்தின் கீழ், இந்த நோக்கத்தில் இந்தியாவில் 3500 கிராமோதய சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 69 சர்வோதய சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மதுரை மண்டலத்தில் 25 சர்வோதய சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மதுரை மண்டலத்தின் சர்வோதயா சங்கங்களின் விற்பனை இலக்காக ரூ.82 கோடி நிர்யிணக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் சர்வோதயா சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களின் கீழ் 40 காதி பவன் கடைகள் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களின் விற்பனை இலக்காக ரூ.30 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காதி கிராம தொழில்களின் ஆணையத்தின் மூலம், சர்வோதயா சங்கங்களின் கீழ் காதிபவன் கடைகளை புதுபித்தல் திட்டம் (Assistance for Marketing Infrastructure) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமதோயா சங்கங்களின் கீழ் செயல்பட்டு வரும் பழைய காதி பவன் கடைகளை புதுப்பித்து விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் மானியம் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் காதிபவன் கடைகளை புதுப்பித்தல் திட்டத்தின் (Assistance for Marketing Infrastructure ) கீழ் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சர்வேதயா சங்கங்களுக்கு மட்டும் ரூ.15 இலட்சம் மான்யம் வழங்கபட்டுள்ளது.

அதனடிப்படையில் அருப்புக்கோட்டை – விருதுநகர் பிரதான சாலையில் காதி கிராமோத்யோக் பவன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த காதி பவனில், கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகிற கதர்பட்டு, கதர்வேட்;டி, கதர் சட்டை, தலையணை, மெத்தை, பீரோ, கட்டில், அகர்பத்தி, தேன் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலமும் பொருட்கள் வாங்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காதி பவனில் உள்ள உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் கிராமபுறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்றும், இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாண்குமார், கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் மண்டல இயக்குநர் அசோகன், கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் உதவி இயக்குநர் சந்திரபாலு, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2021-09-21T08:39:44+05:30

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 2. பெருந்தொற்று
  கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு
 3. மேட்டூர்
  மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 39,634 கன அடியாக அதிகரிப்பு
 4. பெருந்தொற்று
  தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப்பில் டவுன்லோட் செய்வது இவ்வளவு ஈஸியா?
 5. பரமத்தி-வேலூர்
  பரமத்திவேலூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ்...
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்
 8. திருச்செங்கோடு
  மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக அதிமுக பெண் உறுப்பினர்...
 9. உடுமலைப்பேட்டை
  டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
 10. வாசுதேவநல்லூர்
  வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன்...