அருப்புக்கோட்டை-படித்தது 10 ம் வகுப்பு -பார்த்தது ஆங்கில வைத்தியம்

அருப்புக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அருப்புக்கோட்டை-படித்தது 10 ம் வகுப்பு -பார்த்தது ஆங்கில வைத்தியம்
X

 சண்முகசுந்தரம்@எம்.ஏ.போஸ்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்து தாலுகா போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமம் நடுத்தெருவில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் தனியாக கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடேஷ்வரனுக்கு ஏராளமான புகார்கள் வந்தது புகாரை அடுத்து தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரன் தனது குழுவினருடன் செம்பட்டியில் சிறிய வீட்டில் இயங்கிய கிளினிக்கிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த கிளினிக்கை நடத்தி வந்தது அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும் பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.ஏ.போஸ் என பெயரை மாற்றி எம்.எஸ் படித்ததாக பெயர் பலகை வைத்து கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது மேலும் அங்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்த ஊசிகள் , பயன்படுத்தாத புதிய ஊசி மருந்துகள் ,ஸ்டெதஸ்கோப், மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்தனர்

இதனை அடுத்து தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரன் போலி மருத்துவர் சண்முக சுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் சண்முக சுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலி மருத்துவர் சண்முகசுந்தரம் கடந்த 2015 ஆம் ஆண்டு புலியூரான் கிராமத்தில் இதேபோல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 28 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்கான தொழில்நுட்பம்: ஜிதேந்திர சிங்...
 2. இந்தியா
  வேலைவாய்பில் முன்னேற்றம்: செப்டம்பரில் 15.41 லட்சம் பேர் வருங்கால...
 3. ஈரோடு
  பவானிசாகர்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
 4. ஈரோடு
  ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு
 5. இந்தியா
  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் இதுவரை 114 லட்சம் வீடுகளுக்கு...
 6. திருப்பரங்குன்றம்
  மதுரை மாடக் குளத்தில், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதனப்...
 7. திருப்பரங்குன்றம்
  குடும்பத் தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் பலி
 8. இராமநாதபுரம்
  முப்படை தளபதி மறைவுக்கு அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படையினர் அஞ்சலி
 9. ஈரோடு
  ஈரோட்டில் நாளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
 10. ஈரோடு
  ஈரோடு: ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்வு