தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் கழிவறை கட்ட பேரூராட்சி நிதியுதவி

காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் கழிவறை கட்ட பேரூராட்சி நிதியுதவி
X

 தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை பேரூராட்சி தலைவர் செந்தில் பயனாளிகளுக்கு வழங்கினார்

தூய்மை இந்தியா திட்டம்: காரியாபட்டி பேரூராட்சி சார்பில் தனி நபர் கழிப்பறை அமைத்திட நிதி உதவிக்கான உத்தரவு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, திறந்தவெளி கழிவறையை ஒழித்தல், நகரங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்த, ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா 2.O திட்டத்தை (Swachh Bharat Mission-Urban 2.0) பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன்படி, குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் மக்கள் அனைவரும் தங்களுடைய பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், இது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் இந்நிலையில், தமிழகம் உள்பட நாடு முழு ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிவறையை ஒழித்தல், நகரங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை பேரூராட்சி தலைவர் செந்தில் பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் செயல் அலுவலர் ரவிக்குமார் உள்ளார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 22 Sep 2022 9:00 AM GMT

Related News