/* */

சிறுதானிய விதை கடினப்படுத்தும் முறை: விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி

சிறுதானிய விதையை கடினப்படுத்தல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர்.

HIGHLIGHTS

சிறுதானிய விதை கடினப்படுத்தும் முறை: விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி
X

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் சிறுதானிய விதையை கடினப்படுத்தல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர்.

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் காருண்யா வேளாண்பல்கலைக்கழகத்தை சேர்ந்த இறுதியாண்டு படிக்கும் வேளாண்மைத்துறை மாணவ-மாணவிகளான கவியோவிய தமிழன், சுகப்பிரியா மற்றும் சோனியா ஆகியோர் இணைந்து விவசாயிகளுக்கு சிறுதானிய விதை கடினப்படுத்துதலை பற்றிய செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர்.

தற்போது விவசாயிகள் கடும் வறட்சி மற்றும் மழையினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்சினையை தவிர்க்க விதை கடினப்படுத்துதல் முறையை பயன்படுத்தினால் வறட்சி, மழை, குளிர் போன்ற அழுத்த நிலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் நாற்றுக்கு வீரியம் அதிகரிக்கும் எனவும், விதை முளைக்கும் வேகமும், முளைக்கும் சதவீதமும் மற்றும் வேரின் வளர்ச்சியும் அதிகரிக்கும் எனவும், அதேபோல் பூப்பது 2-3 நாட்களுக்கு முன்னதாகவே ஏற்படும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதில் கிராம பஞ்சாயத்து தலைவர் அன்புராஜ், கிராம நிர்வாக அதிகாரி சக்திவேல், கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் கிராம விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 18 Aug 2021 5:00 AM GMT

Related News