திமுக வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் உருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பு

உங்கள் வயிற்றில் பிறந்த பிள்ளை நான் அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மக்கள் மத்தியில் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திமுக வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் உருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பு
X

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் KKSSR. ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை முக்கிய வீதிகள் சத்தியமூர்த்தி பஜார், பந்தல்குடி ரோடு, தெற்குத் தெரு, அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், பிரச்சாரத்தின் போது பேசிய கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கடந்த 5 ஆண்டு காலத்தில் வியாபாரிகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாத நகரமாக அருப்புக்கோட்டை உள்ளது.

தற்போது 4 நாட்கள் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது இன்னும் எட்டு மாத காலத்தில் தினசரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கனரக வாகனங்கள் நகருக்கு வராமல் தடுக்கும் வகையில் சுற்றுச்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஊருக்கு அனைத்து திட்டங்களையும் கொண்டுவந்தது நான் தான். இனி கேன் குடிநீர் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 சம்பளம் வழங்கப்படும். கொரோனா காலத்தில் நான் தான் உங்களுக்கு உதவினேன் உங்களோடு இருக்கும் ஒரே ஆள் நான் மட்டும் தான். உங்கள் வயிற்றில் பிறந்த பிள்ளை நான் என பேசி வாக்கு சேகரித்தார்.

Updated On: 30 March 2021 12:47 AM GMT

Related News