கசாப்பு கடை - கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கசாப்பு கடை - கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு.
X

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட கசாப்பு கடைக்காரர்கள் மீது சுகாதாரத்துறை வருவாய்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து 60 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனோ வைரஸ் 2 வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்து.

தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி நகரின் பல்வேறு இடங்களில் இறைச்சி விற்பணை செய்யப்பட்டு வருவதாக நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

நகராட்சி இதனடிப்படையில் நகராட்சி சுகாதாரதுறை வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது புறவழி சாலை மற்றும் ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி மீறி செயல்பட்ட 5 இறைச்சி கடைகளில் 60 இறைச்சியை பறிமுதல் செய்தனர்

மேலும் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகாரர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி அனைத்தும் கிருமிநாசினி கொண்டு அழித்தனர்.
Updated On: 16 May 2021 5:40 AM GMT

Related News