பட்டப்பகலில் இருசக்கரவாகனம் திருட்டு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பட்டப்பகலில் இருசக்கரவாகனம் திருட்டு
X

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து உள்ளார். கடந்த வியாழன் அன்று காலை நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்த காளிதாஸ் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் காளிதாசின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது தெரிய வந்தது. அந்த சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jan 2021 10:15 AM GMT

Related News