/* */

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: திணறும் காவல்துறை

விழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளை வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை திணறி வருகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: திணறும் காவல்துறை
X
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் அரசு சட்டக் கல்லூரி மாணவியர் விடுதி அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவிய காலத்தின் போது இந்த விடுதி, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது.

அதன் பின்னர் இந்த விடுதி திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. இந்த நிலையில் நேற்று விடுதியின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் காணை போலீசார் விரைந்து சென்று விடுதியை பார்வையிட்டனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுதியில் இருந்த சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட கல்லூரி விடுதியில் திருட்டா என ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.

இங்கு தான் திருட்டு புள்ளிங்க திருடிட்டானுங்கனு பார்த்தா திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட கோவில் உண்டியலை உடைத்து யாரோ பணம், பொருட்கள் திருடிட்டு போயிருக்காங்க,

அட அது விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயில் இருக்கும் மயிலத்தில் பாலய வீதியில் கங்கைகொண்ட மாரியம்மன் கோவில் ஒன்று இருக்குதுங்க. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் வழக்கம் போல் நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை இரவு பூஜை முடிந்ததும் கோவில் நிர்வாகி ராஜேந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலை திறக்க வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவில் யாரோ மர்ம நபர் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றதை கண்டு பதறிய அவர் காவல்துறையில் புகார் செய்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனராம், அந்த வலையில் அந்த கோயில் திருட்டு மீன் அகப்படுமா என போலீசார் எதிர்பாக்குறாங்க

இதான் இப்படி என பார்த்தா பட்டபகலில் மாவட்ட தலைநகரான விழுப்புரம் பகுதியில் திருட்டை திறமையாக நடத்தலாம் என இருவர் பார்த்து இருக்கானுங்க,

விழுப்புரம் பாண்டியன் நகர் 2-வது தெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மர்ம நபர்கள் மோட்டர் சைக்கிளில் நோட்டமிட்டுக்கொண்டே உலா வந்து உள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள பிரபு என்பவரது வீட்டில் கால் பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம், கிருஷ்ணநாராயணன் என்பவரது வீட்டில் ரூ.11 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகை ஆகியவற்றை திருடி உள்ளனர்.

தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்று உள்ளனர். இதை பார்த்து, உடனடியாக இவர்கள் மீது சந்தேகம் அடைந்து அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி அக்கம்,பக்கம் மக்கள் மர்ம நபர்களை பிடிப்பதற்காக துரத்தினர்.

இதை பார்த்த திருடர்கள் சுதாரித்து கொண்டு உடனே இருவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, அங்கு, அவர்கள் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர். ஆனால் பொதுமக்கள் துரத்தியதால், அவர்களிடம் இருந்து தப்பிக்க திருடர்கள் சாதுர்யமா தாங்கள் ஏற்கனவே ஆட்டையை போட்ட நகை மற்றும் பணம் வைத்திருந்த பையை வீசி விட்டு திருடர்கள் வேகமாக சென்று மறைந்து விட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டு சென்ற பையை கைப்பற்றிய போலீசார் அதை சோதனை செய்தபோது உள்ளே ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் நகை, கவரிங் நகைகள் ஆகியவை இருந்ததை கண்டு போலீசுக்கு ஒரே அதிர்ச்சி தான் போங்க,

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களுக்கு போலீசார் இங்கும் வலைவீசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் இது போன்ற சம்பவங்களால் போலீசார் திணறி வருகின்றனர்.

Updated On: 28 Nov 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்