/* */

விழுப்புரம்: மானியத்தில் எஸ்.சி.எஸ்.டி. விவசாயிகளுக்கு மின் இணைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.சி. எஸ்.டி. விவசாயிகளுக்கு மானியத்தில்மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

விழுப்புரம்: மானியத்தில் எஸ்.சி.எஸ்.டி. விவசாயிகளுக்கு மின் இணைப்பு
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் துரித மின்இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு (HP) ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ. 3.60 இலட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோ இணையதள மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை (Bore Well) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத்திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5(HP) குதிரைதிறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூபாய் 25000ம் 7.50(HP) குதிரைத்திறனுக்கு ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூபாய் 27500ம் 10(HP) குதிரைத்திறன் ரூ.3.00 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 30000ம் 15(HP) குதிரைத்திறன் ரூ.4.00 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 40000ம் என வங்கி வரைவோலை (DD) அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.

கடந்த 2017-18 முதல் 2022-23 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணைதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்ட திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தாட்கோ இணையதள முகவரியில் www.tahdco.com என்ற இணைய தளத்தில் நிலத்தின் பட்டா அடங்கல் நகல் "அ" பதிவேடு நகல் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு (Bore Well) அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம் சர்வே எண் மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்பட்ம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 19 March 2023 10:48 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்