Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
TASMAC News Today Tamil - விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர் மோகன்.
TASMAC News Today Tamil -இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகளின்படி சுதந்திர தினத்தன்று அரசு டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே சுதந்திர தினமான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். எனவே வரும் திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் இயங்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2