/* */

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை திடீரென திரண்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நல சங்கத்தினர்,சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட துணைத்தலைவர் பி.முருகன் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு உருவாக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தப்பட வேண்டும், அப்போது மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புதல் ரசீது முறையாக வழங்கப்பட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபடும் மூன்று சக்கர வாகனங்கள் முறையாக வழங்குவதில்லை, அதில் நடக்கும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியானவர்களுக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மோகன் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார், அதில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை கொரோனா முழுவதும் முடிந்த பின்பு நடத்துவதாகவும், மற்ற கோரிக்கைகளை 10 நாட்களுக்குள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

Updated On: 22 July 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி