/* */

விழுப்புரம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 2,599 வழக்குகளுக்கு தீர்வு

விழுப்புரத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 2,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 2,599 வழக்குகளுக்கு தீர்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில்  தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு நடந்தது.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) தேன்மொழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 3,172 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 793 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் வக்கீல்கள் ஸ்ரீதர், நீலமேகவண்ணன், தமிழ்செல்வன், நடராஜன், சுப்பிரமணியன், தன்ராஜன், ரவிக்குமார், வேலவன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 2,108 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 16 லட்சத்து 35 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 491 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.17 கோடியே 23 லட்சத்து 67 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.

Updated On: 15 Aug 2022 5:52 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  6. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  7. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  10. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்