/* */

விழுப்புரம் நகராட்சியில் சாலையில் கிளம்பும் புழுதியால் விபத்து ஏற்படும் அபாயம்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் மேல் தெரு பகுதியில் சாலையில் ஏற்பட்டு வரும் புழுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் நகராட்சியில் சாலையில்  கிளம்பும் புழுதியால் விபத்து ஏற்படும் அபாயம்
X

விழுப்புரம் நகராட்சியில் சாலையில் கிளம்பும் புழுதியால் மக்கள் சிரமப்படும் நிலை நீடிக்கிறது

சாலையில் கிளம்பும் புழுதியால் அடிக்கடி விபத்து அபாயம் நீடிக்கிறது.

விழுப்புரம் நகராட்சி பகுதி வழியாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, இந்த சாலை வழியாக தினந்தோறும் நகர பகுதிக்குள் நூற்றுக்கணக்கான பேருந்துகள், சரக்கு வாகனங்கள், டூவீலர்கள் சென்று வருகின்றன, இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சாலையின் இருபுறமும் பக்க கால்வாய்கள் பணி நடந்தது, இதற்காக தொலைதொடர்பு நிலையம் அருகில் இந்த பக்கம் இருந்து, அந்த பக்கம் இரு கால்வாய்களையும் பள்ளம் தோண்டி இணைப்பு பணி நடைபெற்றது.

அந்த பணியின் போது அங்கு இருந்த தார் சாலை உடைக்கப்பட்டு, சிமெண்ட் சாலை போட்டனர், அதன் மீது சிமெண்ட் ஜல்லியை கொட்டினர், அது திடீர் மழையின் காரணமாக பெயர்ந்து, சிமெண்ட் புகை கிளம்பி, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை மறைப்பதால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது, மிக பெரிய விபத்து ஏற்படும் முன்பு அதனை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Jun 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  2. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  3. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  4. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  5. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு