/* */

கூட்டுறவு வங்கியில் பண மோசடி ஆட்சியரிடம் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் சின்னத்தச்சூர் கூட்டுறவு வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

HIGHLIGHTS

கூட்டுறவு வங்கியில் பண மோசடி ஆட்சியரிடம் கோரிக்கை
X

கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் குறித்து  ஆட்சியர் எஸ்பியிடம் புகார் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம், சின்னதச்சூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய அலுவலங்களில் புகார் தொிவித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்டது தெ.புதுப்பாளையம். இப்பகுதியை சேர்ந்த வள்ளி, வீரம்மாள், சாந்தி, சந்திரா, தண்டபாணி, விநாயகம், வெங்கடேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய அலுவலங்களில் அலுவலகங்களில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவிவரம்: நாங்கள் 7 பேரும் சின்னதச்சூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் எங்களது கணக்கில் வரவு வைப்பதற்காக அங்கு பணிபுரியும் ஒருவர் மூலம் பணம் செலுத்தினோம். நாங்கள் செலுத்திய மொத்த தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரமாகும். இதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. இந்நிலையில் எங்களது கணக்கிலுள்ள தொகையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் எடுக்க சென்ற போது, உங்களது கணக்கில் பணம் இல்லை என அங்கிருந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக கணக்காளரிடம் கேளுங்கள் எனக் கூறிவிட்டார். எனவே கூட்டுறவு கடன் சங்கத்தில் நாங்கள் செலுத்திய பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கள் பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் இது மாதிரியான முறைகேடுகள் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் படிப்பறிவு இல்லாத, புரிதல் இல்லாத ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாயிகள் அதனால் அவர்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் அரசியல் மற்றும் தனிப்பட்ட பின்புலம் உள்ளவர்களின் தலைமையில் செயல்படுவதால் அங்கு பல்வேறு முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதனை கண்காணிக்க வேண்டிய அரசுகளோ சமீபகாலமாக கண்காணிக்க தவறி விட்டு அரசியல் காய் நகர்த்தலுக்காக ஒருவரை ஒருவர் அவ்வப்போது குற்றம் சாட்டிக் கொள்வதோடு ஒதுங்கிக் கொள்கின்றனர். இதனால் கூட்டுறவு வங்கிகளில் அரசியல் பின்புலத்தில் கூட்டுறவு வங்கியின் தலைவராக வருபவர்கள். அந்தந்த வங்கிகளை நலிவடையச் செய்து தி வருகின்றனர்.

இதனால் கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சியை நோக்கி போவதற்கு பதிலாக பின்னோக்கி செல்கிறது. இதனை முன்னோக்கி செல் எடுத்துச் செல்ல வேண்டியதில் அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் உடனடியாக கூட்டுறவு வங்கிகளை தணிக்க செய்வதோடு, வங்கியில் கணக்கு வைத்திருப்போரின் இருப்புகளையும் கணக்குகளையும் சரிபார்க்க வேண்டும் என கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 4 Dec 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  2. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  3. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  4. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  5. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  6. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  7. வீடியோ
    அரைச்ச மாவை அரைக்கும் திமுக ! வச்சி செய்த Annamalai ! #annamalai...
  8. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  9. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  10. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?