/* */

விழுப்புரம் அருகே ஜே.ஆர்.சி. சார்பில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் அருகே முட்டத்தூர் பள்ளியில் மெட்ராஸ் ஐ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜே.ஆர்.சி. அமைப்பினர் நடத்தினர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே ஜே.ஆர்.சி. சார்பில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு பிரச்சாரம்
X

ஜே.ஆர்.சி. அமைப்பின் சார்பில் மெட்ராஸ் ஐ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ். சார்பில் முட்டத்தூர், ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளியில் மெட்ராஸ் ஐ கண் நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் தாளாளர் முனைவர். இ. ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் ஒய். ஜாக்குலின் ஆஷாத் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர். ம. பாபு செல்வதுரை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் மாணவ மாணவியர்கள் , ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மெட்ராஸ் ஐ கண் நோய் குறித்து அலட்சியமும் அச்சமும் வேண்டாம் என்ற தலைப்பில் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கண் நோயின் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,கையாளவேண்டிய வழிமுறைகள், மருத்துவ சிகிச்சை சார்ந்த தகவல்கள் அந் துண்டு பிரசுரத்தில் இடம்பெற்றிருந்தது.மேலும் இத்தகவலினை இதர மாணவர்களுக்கும், பகுதி வாழ் மக்களுக்கும் எடுத்துரைக்க அறிவுறுத்தினர். இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர். தடி. ஜேக்கப் ஜீவானந்தம். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜே.டேவிட் ஜெயபிரகாஷ். உடற்கல்வி ஆசிரியர் ஆர்.கே.செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் ஜி. பிரேம்ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் மாவட்ட கன்வீனர் முனைவர் பாபு செல்வத்துரை தலைமையில் கொரோனா காலத்தில் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பாராட்டுகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மெட்ராஸ் ஐ நோய் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடையே தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மெட்ராஸ் ஐ வந்துவிட்டால் அந்நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மாணவ மாணவிகள் கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் இந்த விழிப்புணர்வு பணியை செய்து வருவது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று உள்ளது.

Updated On: 24 Nov 2022 10:07 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!