/* */

விழுப்புரத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் வேர்ஹவுஸ் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரத்தில் கொரோனாவால் வேலையின்றி வறுமையில் உள்ள சுமை பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததை கண்டித்தும், உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும் சுமைபணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட வேர்ஹவுஸ் குடோன் முன்பு நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் எம்.சுரேஷ் தலைமை தாங்கினார்,துணை தலைவர்கள் கே.பாலு,கே.ஓம்சக்தி, துணை செயலாளர்கள் எஸ்.வசிகமலை, ஆர்.வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

விழுப்புரம் மாவட்ட சுமைபணி சங்க பொதுச்செயலாளர் பி.குமார், சிஐடியு நிர்வாகிகள் மூர்த்தி, முத்துகுமரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கொரோனா கட்டுப்பாடுகளால் விழுப்புரம் வேர்ஹவுஸ் குடோனில் வேலைப்பார்க்கும் சுமைப்பணி தொழிலாளிகள் நீண்ட நாட்களாக வேலையின்றி வறுமையில் உள்ளதால் உடனடியாக வேலை வழங்க வேண்டும்,

குடோன் காலியாக இருந்தும் உரம் உள்ளிட்ட சரக்குகள் உள்ளே வருவதற்கு மாமூல் கேட்கும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

வெளி குடோன்களுக்கு ஒப்பந்ததாரர்கள் சரக்குகளை அவர்களே ஏற்றி செல்லுவதால் சுமைப்பணி தொழிலாளிகள் பாதிக்கப்படுகின்றனர், அதனைத் தடுத்து நிறுத்தி சுமைபணி தொழிலாளர்களே வெளி சரக்குகளை ஏற்றி, இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தொழிலாளர்களுக்கு வாகன நிறுத்த இடம், ஓய்வறை ஆகியன ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி பேசினர்,

மேலும் பணி முடக்கத்தால் குடோனில் இருந்து அரிசி மூட்டைகள் வெளியே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்ட போதும், அதனை கண்டு கொள்ளாமல் இருக்கும் குடோன் மேலாளரை கண்டித்து பேசினர்,

ஆர்ப்பாட்டத்தில் சுமைப்பணி சங்க நிர்வாகிகள்எம்.பழனி, டி.மணிகண்டன், டி.இளவரசன், பி.அய்யப்பன், கே.பாரதிதாசன், கே.புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்