/* */

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில்  சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார், கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமையில் தாங்கி பேசுகையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இக்கூட்டம் நடத்தப்படுவதின் நோக்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் விபத்தில்லா மாவட்டமாக திகழ்த்திட பணிகளை திட்டமிட்டு செயப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில், சட்டம் ஒழுங்கு என்பது ஊராட்சிகளை பொறுத்தவரை ஈடுகாடு பாதை மற்றும் கிராமங்களுக்கான சாலை குறித்து தொடர்பாக பொதுமக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதுபோன்ற நிலைகளை முற்றிலும் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து தொடர்புடைய கிராமப்பகுதிகளில் பொதுமக்களிடம் தக்க ஆலோசனைகளை வழங்கி உடனுக்குடன் தீர்வு வழங்க வேண்டும்,மீண்டும் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு கெடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். கிராமப்பகுதிகளிலிருந்து நகர் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கி வருவதும், பல்வேறு சாகசங்கள் செய்து வருவதும், அதனால் விபத்துக்கனை உருவாக்கி வருகின்றன. இது முழுமையாக தடுக்கும் வகையில் காவல்துறையினர் இதுபோன்ற தவறுகள் செய்யும் மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும், ஒரு விபத்து என்பது அந்த மாணவனுக்கு ஏற்படும் வேதனை மட்டுமின்றி அந்த குடும்பத்திற்கு ஏற்படும் ஒரு பின்னடைவாகும். ஆகவே, காவல்துரையினர் இதில் சிறப்புக்கவணம் எடுத்திட வேண்டும். அதேபோல், பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரின் சிகை அலங்காரம் என்பது மிக மிக அலங்கோலமாக இருக்கிறது. இந்த நிலையைமாற்றி படிக்கும் வயதில் நல்ல பழக்க வழக்கங்களுடன் ஒழுக்கமான முறையில் பயின்றுவர அறிவுறுத்த வேண்டும், மற்றும் பள்ளி, கல்லூரி நேரங்களில் வகுப்புக்களை வீட்டுவிட்டு நகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்களில் அதிகளவு மாணவியர்கள் சுற்றுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதுபோன்ற நிலையை உருவாக்காமல் பள்ளிக்கல்வித்துறை நாள்தோறும் வருகை பதிவேடுகளை கண்காணித்து வராதவர்கள் குறித்து பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், காவல்துறையினர் பூங்கா போன்ற பொழுது நிறைந்த இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் இருந்தால் அவர்கள் குறித்த முகவரிகளை பெற்று நடவடிக்கை எடுத்திடும் வகையில், அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், நகராட்சி நிர்வாகம் மூலம் பூங்காக்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவார காலத்தில் அப்பணியினை மேற்கொள்ளவுள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.அதேபோல், தனியார் பேருந்துகள் அதிவேகத்துடன் செல்வது மட்டுமின்றி, பேருந்து நிறுத்தங்களில் நடுரோட்டில் நிறுத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து வட்டார் போக்குவரத்துத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஒருங்கிணைந்து அவ்வப்பொழுது ஆய்வு செய்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாரிகளில் எம்.சாண்ட் எடுத்துச்செல்லும்பொழுது தார்ப்பாய் மூடி எடுத்துச் செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்து தெரிவிக்கையில், பொதுவாக விபத்துக்கள் என்பது இரவு நேரங்களில் அதிகளவு நடைபெறுகின்றன. அதை தடுக்கும் வண்ணம் எந்தந்த பகுதியில் அதிக விபத்து நடைபெறுகிறது. அதுவும், குறிப்பிட்ட எந்த நேரத்தில் நடக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப அந்தந்த பகுதிகளில் போதிய அளவு ஒளிரும் எச்சரிக்கை பலகை அமைத்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைத்திட வேண்டும். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் விபத்து நடப்பதாக தெரிந்தால் அந்த பகுதியில் சாலை பாதுகாப்பு: காவல்துறையின் மூலம், வாகன தணிக்கை மேற்கொண்டு மது அருந்தி வாகனம். ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகர் எச்சரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட வன அலுவர் சுமேஷ் சோமன், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித்,திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Jun 2022 1:16 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...