/* */

குறை கேட்பை குறை தீர்ப்பு தினமாக்குக: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

Disabled People- விழுப்புரத்தில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு தினத்தை, குறை தீர்ப்பு தினமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

குறை கேட்பை குறை தீர்ப்பு தினமாக்குக: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
X

பைல் படம்.

விழுப்புரத்தில் வருகின்ற 6 ந்தேதி நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு தினத்தை, குறை தீர்ப்பு தினமாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலருக்கு கோரிக்கை வைத்துள்ளனர், அதில் வருகின்ற 06.06.2022. நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு தினத்தை குறை தீர்ப்பு தினமாக நடத்த்திட வேண்டுகிறோம்.அங்கு மனுக்கள் வரிசைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகளை சங்க பிரதிநிதிகள் பேச வாய்ப்பளிக்க வேண்டும், கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கட்டாயம் பங்கேற்க வேண்டும், மேலும் வருவாய் துறை, காவல் துறை, அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் பங்கேற்க செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழக அரசின் ஆணையின் படி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு தினத்தை மாவட்ட ஆட்சியர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பலமுறை முன்வைத்துள்ளோம். அதனை நிறைவேற்றும் வகையில் 6.7.2022ல் குறைதீர்ப்பு தினத்தை நடத்துவதாக அறிவித்துள்தற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டத்தில் 21வகை ஊனங்களை ஆய்வு செய்ய தகுதியான மருத்துவர்கள், . ஊரக-உள்ளாட்சி அதிகரிகள் ஆகியோர் பங்கேற்க செய்ய வேண்டும். மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க அழைக்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவைகள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்படவேண்டும். குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ள இடமாகவும் , மாற்றுத்திறனாளிகள் எளிதில் கலந்து கொள்ளும் இடமாகவும் கூட்டம் நடைபெறும் இடம் இருக்க வேண்டும் என அதில் கேட்டு கொண்டு உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 July 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்