/* */

முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் உருவ சிலைக்கு கலெக்டர் மோகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை
X

முன்னாள் முதல்வர் ஓமாந்தூரார் சிலைக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஓமந்தூரில், சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 128-வது பிறந்தநாளையொட்டி, ஓமந்தூர் அரசு மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் த.மோகன். இன்று (01.02.2022) மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்சிவக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) க.சக்தி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 1 Feb 2022 6:14 AM GMT

Related News