/* */

பலத்த மழையால் நீரில் மிதக்கும் மரக்காணம் பகுதி உப்பளங்கள்

Uppalam -விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் நீர் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பலத்த மழையால் நீரில் மிதக்கும் மரக்காணம் பகுதி உப்பளங்கள்
X

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி உப்பளங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

Uppalam -விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மரக்காணம் பகுதி உப்பளங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழை சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்னும் 4 நாட்கள் வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. வங்காள விரிகுடா பகுதியான மரக்காணத்தில் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. எனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மரக்காணம் மற்றும் மரக்காணத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களில் பெய்கிறது. இதனால் மரக்காணத்தில் உள்ள விவசாய நிலங்கள், ஏரி குளங்களில் நீர் வரத்து அதிகமாக வருகிறது.

கன மழை கொட்டி வருவதால் விவசாய நிலங்களில் மழை நீர் கடல் போல் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் நெல், மணிலா, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருக்கும் விவசாய பெருங்குடி வாழ் மக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

குறிப்பாக மரக்காணத்தில் உள்ள உப்பளம் பகுதியில் பெய்த கனமழையால் மழை நீரில் உப்பளங்கள் மூழ்கியது. இதனால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இந்த உப்பளத்தை நம்பி இருக்கும் 5000 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அன்றாடம் வயிற்றுப்பிழப்பிற்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த மழை மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு ,ஆலத்தூர், பிரம்மதேசம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட 60 கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெய்து வரும் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோன்று ஆண்டுதோறும் பருவமழையின் உப்பளங்களில் நீர் பிடிப்பு ஏற்பட்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதனை நம்பி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பல நாட்கள் பாதிப்படைந்து வருகின்றன. அதனால் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு மழைக்காலங்களில் உப்பளம் பகுதியில் நீர் பிடிப்புகளை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு ஏதாவது இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?