/* */

விழுப்புரம் ரேஷன் கடையில் டிஆர்ஓ திடீர் ஆய்வு

ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் ரேஷன் கடையில் டிஆர்ஓ திடீர் ஆய்வு
X

விழுப்புரம் ரேஷன் கடையில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் ரேஷன் கடையில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி திடீர் ஆய்வு நடத்தினார்.

பொது வினியோக திட்டத்தின்படி, ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி, பிளாஸ்டிக் அரிசி என்றும், பழுப்பு நிறமாக உள்ளதாகவும், பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி, தரமானதுதான் என்பதை விளக்கி கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்த உயர் அதிகாரிகளை அறிவுறுத்தினர். அதன்படி விழுப்புரம் மந்தக்கரை, கைவல்லியர் தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் வெள்ளிக்கிழமை, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்தி பொதுமக்கள் முன்னிலையில் சமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பின்னர் அதன் ருசி, தரம் ஆகியவை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் தரம் நன்றாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் பயப்படாமல் பயன்படுத்தலாம் என்றும், ரேஷன் கடைகளில் முறைகேடு ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது துணைப்பதிவாளர் (பொது வினியோகம்) நளினா, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் யுவராஜ், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 18 March 2023 11:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!