/* */

விழுப்புரம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே  நேரிட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
X

விழுப்புரம் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் கேரளத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், குமுளி பகுதியைச் சோ்ந்த நாராயண் மகன் ஷாஜி (52). புகைப்படக் கலைஞரான இவா், பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்து வந்தாா். இந்நிலையில் ஷாஜி செவ்வாய்க்கிழமை குமுளியிலிருந்து சென்னைக்கு தனது மனைவி சுவிதாவுடன் (45) காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தாா். காரை கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த ஆபிரகாம் (28) ஓட்டி வந்தாா்.இவா்களது காா் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையைக் கடந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு அருகே பேரங்கியூா் பகுதியில் காா் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.இந்த விபத்தில் காரின் முன் பகுதி உருக்குலைந்தது. மேலும், காா் ஓட்டுநா் ஆபிரகாம் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் இருந்த ஷாஜி, அவரது மனைவி சுவிதா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இருப்பினும், மருத்துவமனையில் ஷாஜி உயிரிழந்தாா். சுவிதாவுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jun 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  9. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்