விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதலால் பதற்றம்: போலீஸ் குவிப்பு

கண்டாச்சிபுரத்தில், இருதரப்பினர் மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதலால் பதற்றம்: போலீஸ் குவிப்பு
X

மோதலை தொடர்ந்து, இரு தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார். 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்டது, கண்டாச்சிபுரம். இப்பகுதியில் இருதரப்பில் உள்ள இருவர், குடி போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டனர்.

தகவல் அறிந்து, உடனடியாக விரைந்து வந்த போலீசார், இருதரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்; அதன் முடிவில் வன்முறையை இரு தரப்பினரும் கைவிட்டனர். இருந்தாலும் அப்பகுதியில் ஒருவித பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 17 Jan 2022 4:30 AM GMT

Related News