/* */

திருவெண்ணைநல்லூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: போலீசார் பேச்சுவார்த்தை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

HIGHLIGHTS

திருவெண்ணைநல்லூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: போலீசார் பேச்சுவார்த்தை
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட பெண்னைவலம் ஊராட்சி, பூசாரிபாளையம் கிராமத்தில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள்.

இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் மின் மோட்டார் பழுதானது. இதனால் குடிநீரின்றி தவித்த அக்கிராம மக்கள் பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். இருப்பினும் நடவடிக்கை இல்லை.

இதனால் அந்த கிராம பெண்கள் சாலை மறியல் செய்வதற்காக காலி குடங்களுடன் அங்குள்ள டி.கொளத்தூர் சாலைக்கு திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பெண்கள், அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Sep 2022 12:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு