/* */

திண்டிவனம்: நிலத்தை மீட்டு தர கோரி காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காவல் நிலையம் முன்பு ஒரு தரப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திண்டிவனம்: நிலத்தை மீட்டு தர கோரி காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி
X

திண்டிவனம் அருகே காவல் நிலையம் முன்பு ஒரு தரப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை. இவர் தனது மகள் உமாசங்கரிக்கு தானமாக கொடுத்த 1½ சென்ட் மனையை அதே பகுதியை சேர்ந்த காந்தி மகன்கள் பிரபு(வயது36), தன்ராஜ்(34), நாகப்பன்(40) ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். அதை காலி செய்யும்படி கூறிய தீர்த்தமலையை அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றனர். இதை தட்டிக்கேட்ட உமாசங்கரியையும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து உமாசங்கரி கொடுத்த புகாரின் பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நிலத்தை மீட்டுதரக்கோரி தீர்த்தமலை, உமாசங்கரி, இவரது கணவர் சுகுமார் மற்றும் சிலர் ரோசணை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதை ஏற்காத தீர்த்தமலை போலீஸ் நிலையம் எதிரே சென்று திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கு நின்ற போலீசார் ஓடி சென்று தீர்த்தமலையின் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.

இதையடுத்து உமாசங்கரி, சுகுமார் ஆகியோருடன் சமாதானம் பேசி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற தீர்த்தமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் உமாசங்கரி கொடுத்த புகாரின் பேரில் தன்ராஜ், பிரபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Jun 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!