செஞ்சி அருகே தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தார்சாலை பணியை அமைச்சர் மஸ்தான் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செஞ்சி அருகே தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்
X

செஞ்சி அருகே தார் சாலை அமைக்கும் பணிக்கு அமைச்சர் மஸ்தான் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட மீனம்பூர், பள்ளியம்பட்டு கிராமங்களுக்கு செல்லும் மண் சாலையை ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக தரம் உயர்த்தி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

இதற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2022 2:29 PM GMT

Related News