/* */

கூட்டுறவு வங்கியில் மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செஞ்சி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.7 கோடி மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

கூட்டுறவு வங்கியில் மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

கூட்டுறவு வங்கியில் மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

கூட்டுறவு வங்கியில் ரூ.7 கோடி மோசடி செய்தவரை கைது செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாய்கிழமை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கோ.மாதவன் தலைமை தாங்கினார், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்

  • ஆர்ப்பாட்டத்தில், செஞ்சி சத்தியமங்கலம் தொடக்க வேளாண்ண கூட்டுறவு வங்கியில் (CLSPL 61) டெபாசிட் செய்தவர்கள், சேமிப்பு வைத்தவர்களின் நிதியை ரு. 7-கோடி அளவில் மோசடியில் விசாரணை என கூறி காலம் கடத்தாமல் விசாரணை முடித்து டெபாசிட் பணத்தை திரும்பகொடுக்க வேண்டும்,சேமிப்பு கணக்குகளில் உள்ள பணத்தையும் திரும்பகொடுக்க வேண்டும், மோசடி செய்தவர் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்,
  • விவசாயிகளின் பெயரில் கடன் கொடுத்ததாக பணம் எடுத்து மோசடி உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து காலம் தாழ்த்தாமல் பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.
  • விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்

பாதிக்கப்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் கூறுகையில், போலியான ஆவணங்கள் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், சேமிப்பில் வைத்திருந்த தங்களது பணத்தை எடுக்க முடியாததால் திருமணம், மருத்துவம் கல்வி போன்றவை சேர்க்க முடியாமல் பாதிக்கப்பட்டதையும் கண்ணீருடன் குறைகளை சார்ந்த கோரிக்கையை தெரிவித்தனர்.

அதிகாரிகள் தரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி பொதுமக்கள் அங்கேயே மதிய உணவு தயார் செய்து உண்டு காத்திருக்கின்றனர், எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளிக்காத வரை அங்கிருந்து கலையாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 8 March 2022 11:15 AM GMT

Related News