/* */

சாராயம் காய்ச்சுவதை தடுக்க வேலூர் பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

சாராயம் காய்ச்சுவதை தடுக்க வேலூரில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. தகவல்

HIGHLIGHTS

சாராயம் காய்ச்சுவதை தடுக்க வேலூர் பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
X

தமிழகத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருவது மற்றும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட அமலாக்கப்பிரிவு டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

மேலும் ஆபரேசன் வின்ட் என்ற திட்டத்தில் மது, சாராய விற்பனையை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த திட்டம் வருகிற 22-ந் தேதி வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 'ஆபரேசன் வின்ட்' திட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் மது, சாராய விற்பனை தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் மது, சாராய விற்பனையை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் இதுவரை மது, சாராயம் விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபர்களின் விவரம், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், சாராயம், சாராய ஊறல் குறித்தும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் செயல்பாடுகள் பற்றியும் ஐ.ஜி. கேட்டறிந்தார்.

'ட்ரோன் கேமரா' மூலம் கண்காணிப்பு

இது குறித்து ஐ.ஜி. லோகநாதன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட இடங்கள் ஜி.பி.எஸ். மூலம் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணி மற்றும் ரோந்து பணி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Updated On: 11 Jun 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  2. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  3. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  4. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  5. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  6. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  7. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...