/* */

வேலூர் மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசு

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள்

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசு
X

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வாஷிங் மிஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் நடக்கும் முகாம்களில் 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு பொதுமக்களை வரவழைக்கும் வகையில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்க வேலூர் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதில், முதல் பரிசாக ஒருவருக்கு வாஷிங் மிஷின், 2-ம் பரிசாக ஒருவருக்கு மிக்சி, 3-ம் பரிசாக ஒருவருக்கு செல்போன் ஆகியவை வழங்கப்படும். அதைத்தவிர தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு வழங்க மண்டலம் வாரியாக டோக்கன் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது

Updated On: 10 Oct 2021 2:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!