கே.வி.குப்பம் தொகுதியை கேட்டு அதிமுக தொண்டர்கள் போராட்டம்

கே.வி.குப்பம் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்குவதை கண்டித்து அதிமுக தொண்டர்கள் திடீர் போராட்டம், சாலை மறியல்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கே.வி.குப்பம் தொகுதியை கேட்டு அதிமுக தொண்டர்கள் போராட்டம்
X

வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காலியாகவும், 3 தொகுதிகள் திமுக வசமும் உள்ளன. மற்றோரு தொகுதியான கே.வி.குப்பம் தனி தொகுதி அதிமுக வசம் உள்ளது. தற்போது அத்தொகுதி எம்.எல்.ஏவாக ஓய்வு பெற்ற முன்னால் இராணுவ வீரர் லோகநாதன் உள்ளார்.

இந்நிலையில் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்த இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டது. அதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதி இடம் பெறவில்லை என்றும், அத்தொகுதியை மாற்று கட்சிக்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என கூறி அக்கட்சியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் லத்தேரி பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல் துறையினர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 11 March 2021 1:19 AM GMT

Related News