/* */

விபத்து ஏற்பத்தியவரை கைது செய்யகோரி காவல் நிலையம் முற்றுகை.

விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரியும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க கோரியும் கே.வி.குப்பம் காவல் நிலையம் முற்றுகையிட்டு பொது மக்கள் சாலை மறியல்

HIGHLIGHTS

விபத்து ஏற்பத்தியவரை கைது செய்யகோரி காவல் நிலையம் முற்றுகை.
X

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சீத்திராம்பேட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(46) இவர் இன்று காலை குடியாத்தம்- கே.வி.குப்பம் சாலையில் வேப்பனேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்ற நிலையில் இது குறித்து மாலை வரை கே.வி.குப்பம் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறி. விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த ஜெய்சங்கர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜெய்சங்கரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குடியாத்தம்-காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் இது குறித்து கே.வி.குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 9 March 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?