/* */

காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயம்

கே.வி.குப்பத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயம்
X

கே.வி குப்பத்தில் நடைபெற்ற காளை விடும் விழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் காமாட்சி அம்மன் பேட்டை காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு 145-ம் ஆண்டு காளை விடும் விழா நடைபெற்றது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கே.காமராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மா ஸ்ரீதர், ஒன்றியக்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டாட்சியர் து.சரண்யா, குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, காவல் ஆய்வாளர் செந்தில்குமாரி, மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ண.பலராமன், கிராம நிர்வாக அலுவலர் கு.கலைவாணி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து கொண்டனர்.

விழாவில் 144 மாடுகள் கலந்துகொண்டன. முருகன் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுகள் முட்டியதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Updated On: 27 March 2022 7:43 AM GMT

Related News