மாணவி கடத்தல் : போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

காதல் வார்த்தை கூறி, 11-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய இளைஞரும், உடந்தையாக செயல்பட்ட நபரும் போக்சோ சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாணவி கடத்தல் : போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
X

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்விலாச்சூர் பகுதியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை (16) காணவில்லை, என அவரது பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட கே.வி.குப்பம் காவல் துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் முத்துக்குமரன் (24) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கே.வி.குப்பம் அருகே முத்துக்குமரன் மற்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் பள்ளி மாணவி ஆகிய இருவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியை கடத்த முத்துக்குமார் மற்றும் அவருக்கு உதவியதாக ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த, ராணுவ வீரரான வினோத்குமார் (25) இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2021-03-07T18:31:05+05:30

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Athipalam benefits in Tamil அத்திப்பழத்தின் நன்மைகள் தமிழில்
 2. தமிழ்நாடு
  டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் ரிட்டர்ன் முறை: தமிழக அரசுக்கு...
 3. மதுரை
  சதுரகிரி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 29 -ம் தேதி...
 4. இந்தியா
  மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம்: மும்பையில் 144 தடை உத்தரவு
 5. தமிழ்நாடு
  நலம் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே பரவும் கால்நடை நோயால் பொதுமக்கள் அச்சம்
 7. நாமக்கல்
  நாமக்கல்லில் இலவச கலைப்பயிற்சிக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை
 8. லைஃப்ஸ்டைல்
  Amla Juice benefits in Tamil நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் தமிழில்
 9. இந்தியா
  அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி: துணைநிலை ஆளுநர் தமிழிசை...
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் ரோட்டரி சங்கத்திற்கு 16 விருதுகள்