/* */

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது: கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும்   தயார் நிலையில் உள்ளது: கலெக்டர்
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது பேசிய அவர், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம்,அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் அனைத்து வயதினரும் மார்ச் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் விருதுகள் வழங்கப்படும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதற்கு அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 24 இடங்களிலுள்ள உள்ள 87 பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படும் மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது பூத் ஸ்லிப் அச்சடிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பூத் ஸ்லிப் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாக்காளர்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கவேண்டும். மாற்று நபர்களிடம் வழங்குவதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலின்போது கொரானா விதிமுறைகளை கடைபிடிக்க அதற்குத் தேவையான உபகரணங்களும் வாக்குச்சாவடி மையங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Updated On: 14 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  3. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  8. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  9. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  10. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!