/* */

வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
X

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது . தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 38 பேராக இருந்த நிலையில், இன்று 27 பேராக குறைந்துள்ளது . அதேநேரத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா உள்நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்திருக்கிறது .

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது , ' தனியார் மருத்துவமனைகளில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மட்டுமே தற்போது கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் . மற்றபடி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜி பி எச் மருத்துவ மனைகளுக்கு மட்டுமே கொரோனா நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர் ' என்றனர் .

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்துக்கு நேற்று இரவு மேலும் 14 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் கோவாக்சின் 4 ஆயிரம் டோஸ்களும், கோவிஷீல்டு 10 ஆயிரம் டோஸ்களும் அடங்கும் . இவை உடனடியாக தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 July 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...