/* */

'யாரைக் கேட்கிறாய் வரி..?' மறக்கமுடியா கட்டபொம்மனின் வீரம்..! வரலாறு படிங்க..!

Kattabomman In Tamil-கட்டபொம்மன் திரைப்படம் பார்த்தவர்கள் கட்டபொம்மனின் வீர வசனங்களை கேட்டு மெய்சிலிர்க்காதவர்கள் உள்ளனரா..?

HIGHLIGHTS

Kattabomman In Tamil
X

Kattabomman In Tamil

Kattabomman in Tamil-கட்டபொம்மனின் வீர வசனம் கட்டபொம்மன் திரைப்படத்தில் பேசப்படுவதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. "யாரைக் கேட்கிறாய் வரி..? எவரைக் கேட்கிறாய் வட்டி..? என்ற வசனம் கேட்பவரை புல்லரிக்கவைக்கும். 200 ஆண்டுகளை தாண்டியும் கட்டபொம்மனின் வீரம் தமிழ் மண்ணில் மறையாமல் இன்றளவும் உள்ளது.

அந்த அளவிற்கு நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் தங்களது ஆதிக்கம் செலுத்தியபோது அவர்களை துணிந்து எதிர்த்து நின்றவர். சினந்தெழும் வீரம் கொண்டவர். ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் தங்களது வணிகத்தை துவங்க நினைத்த போது கட்டபொம்மன் துணிச்சலோடு ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று தண்னி ஒரு மாவீரன் என்று காட்டினார்.

அப்படி வீரம் செறிந்த கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வோம்.

பிறப்பு :

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சியே கட்டபொம்மன் பிறந்த ஊர். அந்த ஊரில் 1760ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி திக்குவிசய கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார். இவரது இயற்பெயர் வீரபாண்டியன் மற்றும் அவர்களது குடும்பப்பெயர் கட்டபொம்மன். இது இரண்டும் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் என்று அழைக்கப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜனவரி 3, 1760

பெற்றோர் – திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள்

பிறந்த ஊர் – பாஞ்சாலங்குறிச்சி

இளமை வாழ்க்கை :

கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்களுடன் சேர்த்து குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். இவர் அரச குடும்பம் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார். பிறகு தனது தந்தையின் மேல் வைத்த பாசம் மற்றும் ஈர்ப்பினால் இளம் வயதில் அவரது தந்தையான திக்குவிசய கட்டபொம்மன் உடனே அவருக்கு உதவியாக இருந்தார்.

திருமண வாழ்க்கை :

பிறகு அவர் வாலிப வயதினை அடைந்ததும் வீரசக்கம்மாள் என்கிறவரை திருமணம் செய்து கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் -வீரசக்கம்மாள் தம்பதிக்கு இறுதிவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அவரது சந்ததி அவருடன் முடிந்துபோனது.

பாளையக்காரர் அரியாசனம் :

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு 30 வயதாக இருக்கும்போது தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தும் அவரே அரியணை ஏறினார். இதற்கு அவர் மக்களிடம் பெற்ற நன்மதிப்பும் அவரது வீரமும் தான் காரணமாக அமைந்தன.

பாஞ்சாலங்குறிச்சியில் வரி வசூல் :

ஆங்கிலேயர்கள் சொந்த நாட்டில் ஆட்சி செய்த மன்னர்களிடமே வரி வசூல் செய்து வந்தனர். இதை பல மன்னர்கள் எதிர்த்தனர். சிலர் அஞ்சி கப்பம் கட்டி வந்தனர். இதனால் கட்டபொம்மனும் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. தனது ராஜ்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் அளவிற்கு செல்வம் இல்லை.அதனால், கட்டபொம்மன் மக்களிடம் பணம் வசூலித்தார். அப்போது அந்த பகுதியில் வாழும் மக்கள் கட்டபொம்மனை வசைபாடத் துவங்கினர்.

கட்டபொம்மனை சீண்டிய ஜாக்சன் துரை :

மக்கள் தன்னை வசைபாடுவதை கண்டு மனம் நொந்து இருந்த நேரத்தில் ஜாக்சன் துரை அவனிடம் கப்பம் வசூலிக்க வந்தான். அப்போது கோபத்தின் உச்சத்தில் இருந்த இருந்த கட்டபொம்மன் சினந்தெழுந்து ஜாக்சன் துரையை நோக்கி,

"வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி". என்று துணிச்சலாக அவரின் முகத்தின் எதிரே தனது வீரத்தினை வெளிப்படுத்தி வரியினை கட்ட முடியாது என்று துணிச்சலாக கூறி அவனை வெளியே அனுப்பினார்.

கட்டபொம்மனுடன் போர் :

ஆங்கிலேயர்கள், திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகு அவர்களது பார்வை வீரபாண்டிய கட்டபொம்மன் மீது திரும்பியது. இவனை வீழ்த்தினால் மட்டுமே நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள்,கட்டபொம்மன் மீது போர் தொடுக்கத் தயாரானார்கள். இதனை முன்பே கணித்த கட்டபொம்மன் தனது ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயரை எதிர்த்தான். போரில் கடுமையாக சண்டையிட்டும் ஆங்கிலேயர்களால் அவனது ராஜ்ஜியம் கவரப்பட்டது. போரில் தனது ராஜ்யத்தை இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் அடைந்தார். ஆனால் ஆங்கிலேயர்களுக்குப் பயந்து அந்த மன்னன் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தான். அதோடு அவரையும் ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தனர்.

தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் :

ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டப் பின்னர் நடந்த விசாரணையின் போதும் தனது வீரத்தினை வெளிக்காட்டினார். விசாரணையின் போது அவர் நான் உங்களை அழிக்கவேண்டும் என்று நினைத்து தான் உங்கள் மீது போர் புரிந்தேன் என்று வீரமுடன் வெள்ளையர்களிடம் நேரடியாக கூறினார். மேலும் நான் இங்கு தூக்கிலிடப்படுவதை காட்டிலும் நான் என் இடத்திலே உங்கள் கையால் இறந்திருக்கலாம் என்று வேதனைப்பட்டார். கயத்தாறு எனும் இடத்தில் 1799ம் ஆண்டு அக்டோபர் 19ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

இன்றளவும் கட்டபொம்மனைக்காட்டிக் கொடுத்த எட்டயப்பனை நாம் மறக்கமுடியாமல் எட்டயப்பனாக இருக்காதீர்கள் என்று பேச்சுவழக்கில் குறிப்பிடுகிறோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 April 2024 11:01 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?