/* */

எம்பி -க்களாக நியமிக்கப்பட்ட இளையராஜா, பி.டி.உஷா ஆகியோருக்கு வைகோ வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா- பி.டி. உஷா ஆகியோருக்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார்

HIGHLIGHTS

எம்பி -க்களாக நியமிக்கப்பட்ட  இளையராஜா, பி.டி.உஷா ஆகியோருக்கு வைகோ வாழ்த்து
X

பைல் படம்

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட இசைஞானி இளையராஜா, வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இசை மேதை இளையராஜா, விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ணைப்புரத்தில் பிறந்து, பாவலர் வரதராஜனின் அரவணைப்பில் பயின்று, இசைத் துறையில் உலக சாதனை நிகழ்த்தி இமயமாய் உயர்ந்து நிற்பவர் நம் இசைஞானி இளையராஜா.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களுக்கும், திரைப் பாடல்களுக்கும் இசை அமைத்தவர், 20 ஆயிரத்துக்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர், அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இந்திய அரசின் தேசிய விருதுகளை ஐந்து முறை பெற்றவர் என பல்வேறு சிறப்புகளை அணிகலன் களாக கொண்டவர் நம் இளையராஜா. இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதும் நம் இளையராஜாவை தேடி வந்து சிறப்பு செய்தது.இலண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியின் Classical Guitar Higher தேர்வில் தங்கப் பதக்கம் பெற்ற சாதனையாள ரான இளையராஜா, அதே இலண்டனில் ராயல் ஃபில்ஹார் மோனிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனி இசை அமைத்து, மாஸ்ட்ரோ எனும் உலக சாதனையாளராக உயர்ந்து நிற்கிறார்.

ஜெர்மன் நாட்டில் பிறந்த பீத்தோவான் ஒன்பது சிம்பொனி அமைத்து உலக சாதனை படைத்தவர் ஆவார். அவரின் தொடர்ச்சியாக நம் இளையராஜா விளங்கியதை கொரியா நாட்டுக்காரர்கள் சாதிக்காத சாதனையை, ஜப்பானியர் களால் நிகழ்த்த முடியாத சாதனையை, அமெரிக்கர்களால் செய்ய முடியாத சாதனையை, ஏன்? உலக நாடுகளில் எங்கும் நிகழ்த்த முடியாத சாதனையை இந்தியத் துணைக் கண்டத் தில் – தென்னகத்தில் – தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நம் இளையராஜா சாதித்திருக்கிறார் என்று நாடாளுமன்றத்தில் நான் முழக்கமிட்டு, இளையராஜாவின் புகழை உலகம் அறியச் செய்தேன்.

இசைத் துறையில் உலக சாதனை நிகழ்த்திய இளையராஜா வுக்கு மதுரை மாநகரில் பாராட்டுக் கூட்டம் நடத்தி, நம் இயக்கத்தின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்தோம்.இசைத் துறையில் சாதனைச் சரிதம் படைத்து வரும் நம் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரும் சிறப்பாகும். இந்த இனிய வேளையில் இளையராஜா அவர்களுக்கு மீண்டும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தடகள விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடி 1982 ஆம் ஆண்டு முதல் 1990 வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்த விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா அவர்களும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கும் நம்முடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள் என வைகோ தெரிவித்துள்ளார்.

Updated On: 9 July 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?