/* */

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்

தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்

HIGHLIGHTS

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கி விட்டது. இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை தொடங்கியது.

இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காணொளி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர், பொது இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம்.

தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவது உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால் என கூறியுள்ளார்.

Updated On: 25 April 2022 8:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?