/* */

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி திருவெறும்பூர் சார்-பதிவாளர் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி திருவெறும்பூர் சார்-பதிவாளரை இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி திருவெறும்பூர் சார்-பதிவாளர் கைது
X
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் பாஸ்கரன்.

திருச்சி திருவெறும்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்- பதிவாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் அசோக்குமார் . இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் தாலுகா பாப்பா குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். அதன் பேரில் அசோக் குமார் திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை பத்திர பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் பாஸ்கரனை அணுகினார்.

அதற்கு சார்பதிவாளர் பாஸ்கரன் நிலத்தினை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். மேலும் விவசாய நிலமாக 47 Aபடி பத்திரம் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான் விவசாய நிலமாக பதிவு செய்ய இயலும் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பதிவாளர் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை சார் பதிவாளர் பாஸ்கரனிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டின் படி அசோக்குமார் இன்று மாலை சார் பதிவாளர் பாஸ்கரனிடம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் சார் பதிவாளர் பாஸ்கரனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்கள். மேலும் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினார்கள்.

திருவெறும்பூர் சார்பதிவாளர் பாஸ்கரன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள செய்தி திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 Dec 2022 4:30 AM GMT

Related News