/* */

பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து புறப்பட்டது ஊட்டி மலை ரயில் என்ஜின்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது

HIGHLIGHTS

பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து புறப்பட்டது ஊட்டி மலை ரயில் என்ஜின்
X
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் லாரியில் ஏற்றப்பட்டு புறப்பட்டது.

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இது இந்திய ரயில்வேயின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள மூன்று ரயில்வே பணிமனைகளில் மிகப் பெரிய பணிமனையாகும். இப்பணிமனையானது 1926-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1928-ல் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை 96 வருடங்கள் ஆகிறது.

பொன்மலை ரயில்வே பணிமனை


மொத்தமாக 200 ஏக்கர் பரப்பளவில் இப்பணிமனையானது அமைந்துள்ளது. இந்த கட்டிடக்கலையானது முற்றிலும் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்பட்ட பிரிட்டீஷ் கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். இங்கிருந்து இருப்பு பாதை ரயில் இன்ஜின்கள், சக்கரங்கள், பயணிகள் ரயில் பெட்டிகள். போன்றவைகளை பழுதுபார்த்து இந்திய ரயில்வே துறைக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இப்பணிமனையில் இரண்டாவது உலகப் போரின் போது ராயல் ஏர்போர்ட்ஸ் என்னும் பிரிட்டன் நாட்டின் விமானப்படை விமானங்கள் பழுது பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இப்பணிமனையை சுற்றிலும் அமைந்துள்ள 2500 சதுர ஏக்கர் நிலப்பரப்பில் பணிமனை ஊழியர்கள், குடும்பங்கள் தங்குவதற்கான குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.

முக்கிய பணி

நீலகிரி மலை ரயில் என்ஜின் மற்றும் அகலப்பாதை பெட்டிகள் அனைத்தும் பராமரிப்பு செய்யப்படுகிறது. மேலும் இப்பணிமனையில் அகலப்பாதை, மீட்டர் கேஜ் மற்றும் நேரோ கேஜ் பெட்டிகள் தான்சானியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இப்பணிமனை துவங்கிய ஆரம்ப கால கட்டங்களில் ரயில்வே நிர்வாகத்தின் மூலம் டீசல் இன்ஜின்கள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் இருக்கும் ரயில்வே மண்டலங்களுக்கு மறு சீரமைப்பு செய்து அனுப்பப்பட்டுள்ளது. பலதரப்பட்ட சரக்கு பெட்டிகளான பாம் வேகன், கோல் வேகன், ஆயில் டேங்கர் வேகன் இவை அனைத்தையும் இப்பணிமனையில் தயாரித்து அனுப்பப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இப்பணிமனையில் பயணச் சீட்டு அச்சிடப்பட்டு வந்தது குறிப்பிட்டதக்கது. இப்பணிமனையின் நோக்கமே நீராவி இன்ஜின்களை உற்பத்தி செய்வதும், டீசல் மற்றும் ரயில் பெட்டிகளை பழுது பார்ப்பதும் ஆகும். இப்பணிமனையாவது 2 மாதத்திற்கு ஒருமுறை ஒரு இன்ஜினை பராமரிக்கும் நிலை மாறி 1990-க்கு பின்பு தற்போது வருடத்திற்கு 10 இன்ஜின்களை மறுசீரமைப்பு செய்யும் திறன் வாய்ந்ததாக வெற்றிகரமாக செயல்படுகிறது.

6 ஆயிரம் தொழிலாளர்கள்


1990 காலக்கட்டத்தில் 5 மண்டலங்களுக்கு தேவைப்படும் லோக்கோ இன்ஜின்களை அனுப்பியுள்ளது. கான்கார் நிறுவனத்திற்கு வேகன்களைசெய்து அனுப்பிய திறன் இப்பணிமனையைச் சாரும். இப்பணிமனையில் சுமார் 6000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் இணைந்து அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர். இதுவே இப்பணிமனையின் மிகப்பெரிய சிறப்பாகும்.

மே 1 தொழிளார் தினத்தன்று இப்பணிமனையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் தொழிலாளர்கள் தன் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்லும் வகையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் இப்பணிமனையில் 750 பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் மகளிர் தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு அனைத்து மகளிருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிமனைக்கு என்று 150 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் முன்னாள் இந்நாள் தொழிலாளர்களின் 10000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.

பொன்மலை சந்தை

மேலும் 100 சதுர மீட்டர் பரப்பளவில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் சந்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பட்டு வருகிறது. இதனால் பென்மலை பகுதி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் குடியிருக்கும் பொதுமக்கள், சிறு. குறு வியாபாரிகள் பண்ணையாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இப்பணிமனையைச் சுற்றிலும் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு கருங்கற்களான மதில் சுவர் எழுப்பப்படுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சுமார் 200 ஆர்பிஎப் வீரர்கள் பணி செய்து வருகின்றனர். இப்பணிமனையை சுற்றி நான்குபுறமும் தொழிலாளர்கள் எளிதில் வந்து செல்ல நுழைவாயில் அமைக்கப்பட்டடுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய நுழைவு வாயிலாக ஆர்மரிகேட் அமைந்துள்ளது.

வருடத்திற்கு ஒருமுறை ஆயுதபூஜை அன்று பொதுமக்களின் பார்வைக்காக இப்பணிமனையானது திறந்துவிடப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் நல்ல உற்பத்தி திறன் கொண்ட சிறந்த பணிமனைக்கான தேசிய விருதை பெற்றது.2020, 2021, 2022 ம்ஆண்டுகளுக்கான தேசிய அளவிலான சிறந்த உற்பத்தி திறன் கொண்ட பணிமனை என்கிற பரிசையும் பெற்று உள்ளது.

ஊட்டி மலை ரயில் என்ஜின்

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஊட்டி மலையில் இங்கு தயாரிக்கப்பட்ட 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றன. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக உலை ஆயில் (ஃபர்னஸ் ஆயில்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜினை ஆன் செய்யும் போது, அதிகளவில் புகை எழும்பும். இதனால் உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் தயாராகியுள்ளது.

லாரியில் புறப்பட்டது

இதில், என்ஜினை ஆன் செய்ய பயன்படுத்தும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்க கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும். தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல என்ஜினின் உள்பகுதியிலும் எல்.இ.டி .பல்புகளும் உள்ளது. இந்த சிறப்பு ரயில் என்ஜினை ரூ. 9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி துவங்கி 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர். இந்த என்ஜின் இயக் கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதே பணிமனையில் புனரமைப்பு செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றைக்கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த என்ஜின் லாரி மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Updated On: 7 Oct 2022 4:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு