/* */

இன்று சர்வதேச நண்பர்கள் தினம்

International Friendship Day - இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

இன்று சர்வதேச நண்பர்கள் தினம்
X

இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

International Friendship Day - உன் நண்பனை பற்றி சொல்; உன்னை பற்றி சொல்கிறேன் என்ற வார்த்தைகளில் இருந்து, ஒரு மனிதனை பற்றி, அவன் நண்பன் மூலம் அறிய முடியும் என்றால், அதுதான் நட்பின் மகத்துவம். உண்மையின் வெளிப்பாடு.

நெருங்கிய உறவுகளிடம் கூட பகிர முடியாத மன உணர்வுகளை, வாழ்க்கை சிக்கல்களை நண்பர்களிடம்தான் பகிர முடிகிறது. இதனால் மன பாரம் தீர்கிறது; ஆறுதல் கிடைக்கிறது என்றால், அதுதான் நண்பர்களின் மேன்மை.

நுாற்றுக்கணக்கான நண்பர்களிடம் பழகினாலும், ஆத்மார்த்தமான நண்பர்களாக ஒரு சிலரே அமைகின்றனர். பால்ய காலத்தில் பழக துவங்கி, வாழ்வின் கடைசி நொடி வரை நண்பர்களாகவே வாழ்ந்து மறைந்தவர்கள் இந்த பூமியில் ஏராளம்.

இன்றைய நவீன உலகில் முகநுால் வழி நண்பர்களையும், நட்பாக்கி கொள்கிறோம். ஆனால், அருகில் வசிக்கும் நண்பர்களிடம் நட்பை பலப்படுத்திக் கொள்ள மறந்து விடுகிறோம். ஆயிரமாயிரம் நண்பர்கள் அவசியமே இல்லை. நம் மீது உண்மையான அன்பு கொண்ட சொற்ப எண்ணிக்கை நட்பே போதுமானது.

கணவன் மனைவி, தந்தை மகன், தாய் மகள் உறவுகளில் கூட நட்பை முதன்மைப்படுத்தினால், அந்த உறவில் இன்னும் ஆழமும் அன்பும் அதிகரிக்கும். ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகி, நாளடைவில் காதலர்களாகி மண வாழ்வில் இணைகின்றனர். ஆனால் மண வாழ்வில் இணைந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலர்களாக இருந்தும், அவர்களுக்குள் நட்பு இல்லாததால் பாதியிலேயே பிரிகின்றனர். காதலை தாண்டியும் நட்பு, வாழ்வில் இணக்கத்தை அதிகப்படுத்துகிறது என்ற உண்மை இதிலிருந்து புலப்படுகிறது.

எனவே, சர்வதேச நண்பர்கள் தினத்தில் இன்று நட்பை பாராட்டுவோம்; அனைவரிடமும் நட்பாக இருந்து, நல்ல நண்பர்களாக வாழ்வை சிறப்பாக்குவோம். வீடு, அலுவலகம், சமுதாயம் என பரந்துபட்ட உலகில், நட்பு வானில் சிறகடிப்போம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Aug 2022 4:52 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...