இன்று கவியரசு கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

இன்று கவியரசு கண்ணதாசனின் 96வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இன்று கவியரசு கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

கவியரசு கண்ணதாசன்.

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் கவியரசு கண்ணதாசனின் 96 -வது பிறந்தநாள் இன்று. தமிழ் சினிமா உலகம் உள்ளவரை கவிஞர் கண்ணதாசனின் புகழ் நிலைத்திருக்கும். பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை இன்றும் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருப்பதை கேட்க முடிகிறது.

செட்டிநாட்டு சீமையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கவிஞர் கண்ணதாசனை அவர் எழுதிய திரைப்பட பாடல்கள் ஏழரை கோடி தமிழ் மக்களுக்கும் அறிமுகமாக்கியது .காதல், வீரம், குடும்பம் என அனைத்து துறைகளிலும் எதார்த்தமாக அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் தத்துவ பாடல்கள் ஆகும். அந்த பாடல்களில் உண்மை பதிந்திருக்கும். ஆரம்பத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் அவர் அனைத்து கட்சியினராலும் போற்றப்படும் ஒரு மாபெரும் கவிஞர் ஆவார்.

'நான் நிரந்தரமானவன் எந்த நிலையிலும் எனக்கு அழிவில்லை' என்று அவர் பாடிய கவிதை இன்றும் கவிஞருக்கு மரணம் இல்லை என்பதை நிலைநாட்டி வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் தமிழக அரசு சார்பில் கண்ணதாசன் உருவ சிலைக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ,செய்தித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல தமிழகம் முழுவதும் கண்ணதாசன் பிறந்த நாள் விழா அவர் மீது பற்றுக்கொண்டு உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Updated On: 2022-06-24T13:18:04+05:30

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874 ஹெக்டேர்...
 3. விக்கிரவாண்டி
  விக்கிரவாண்டி பேரூராட்சியில் முக கவசம் அணிய விழிப்புணர்வு தீர்மானம்
 4. நாமக்கல்
  நாமக்கல் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
 5. திருவண்ணாமலை
  உயர்கல்வியில் சேரும் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட...
 6. சினிமா
  எதிர்பாராத வெற்றியில் 'மாயோன்':கேக் வெட்டிக் கொண்டாடிய...
 7. திருவண்ணாமலை
  ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும்: மாவட்ட...
 8. விழுப்புரம்
  விழுப்புரத்தில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு ரயில்
 9. நாமக்கல்
  கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் சங்கத்தினர் காத்திருப்பு...
 10. விழுப்புரம்
  அரசு சட்ட கல்லூரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி