Begin typing your search above and press return to search.
தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது
HIGHLIGHTS

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடரந்து அதிகரித்து வருகின்றது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.