ரெயில் பாதை பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு

திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரெயில் பாதை பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு
X

ரெயில் பாதை திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கு நடைபெற்ற  கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் எனக் கூட்டத்தில் தனித் தாசில்தார் பேசினார்.

திண்டிவனம்-நகரி அகல ரெயில் பாதை திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தும் விவசாய நிலங்களின் பட்டா சரிபார்த்தல், நில அளவீடு மற்றும் நில மதிப்பீடு செய்யும் கூட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தனித் தாசில்தார் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தனித் தாசில்தார் கிருஷ்ணசாமி பேசியதாவது,

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களின் நிலங்களை ரெயில்வே பணிக்கு வழங்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் நிலங்களுக்கு நேரடியான முறையிலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் 2 வழிகளில் இழப்பீடு வழங்க கோரலாம். ஆகவே நேரடி பேச்சுவார்த்தை மூலம் இழப்பீடு கேட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தற்போது அதிக இழப்பீடு தொகை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பீடு ஒரு சென்ட் ரூ.100 என்றால் ரூ.300 ஆக கொடுக்க முன் வந்துள்ளோம். அதாவது 3 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். ஆகையால் தற்போது வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சுமார் பட்டா நிலம் 498 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 293 ஏக்கரும் தேர்வு செய்துள்ளோம்.

அதில் கிணறு, மரம், கட்டிடங்கள் போன்றவற்றுக்கு அதன் மதிப்புக்கு தகுந்தாற்போல் இழப்பீடு வழங்கப்படும். அதற்கு விவசாயிகள் கூறுகையில், நிலங்களை ரெயில் பாதை அமைக்க கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் எங்கள் குடும்பத்தில் படித்த யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும், என்றனர்.

கூட்டத்தில் புதிய தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் பெருமாள், துணைத் தாசில்தார் கோபால் மற்றும் சு.காட்டேரி, தெள்ளார், புலிவாய், வந்தவாசி ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Oct 2021 6:58 AM GMT

Related News

Latest News

 1. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 2. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 3. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 4. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 5. துறையூர்
  உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள்...
 6. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு : சிறையில் இருந்தபடியே துணை தலைவரான பிரபல ரவுடியின் மனைவி
 7. தமிழ்நாடு
  அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
 8. முசிறி
  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க...
 9. மணப்பாறை
  மணப்பாறையில் சாக்கு மூட்டையில் மனுக்களுடன் முதியவர் உண்ணாவிரதம்
 10. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்