/* */

வந்தவாசி அருகே ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம்

வந்தவாசி அருகே மும்முனி கிராமத்தில் ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம்
X

வந்தவாசி அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கவில்லை என குற்றம்சாட்டி வந்தனர். மேலும் மும்முனி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாதாலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இது சம்பந்தமாக வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் தெரிவித்தும் எந்தவதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் நேற்று மாலை வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவலறிந்த வந்தவாசி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதற்கும், குடிநீர் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

பின்னர் கிராம பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்த மறியலால் நெடுஞ்சாலையில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 14 April 2022 5:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?