/* */

வந்தவாசியில் தமிழ்சங்கம் சார்பில் மதநல்லிணக்க பேரணியுடன் கலைநிகழ்ச்சி

வந்தவாசியில் தமிழ்சங்கம் சார்பில் மதநல்லிணக்க பேரணி கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தது.

HIGHLIGHTS

வந்தவாசியில் தமிழ்சங்கம் சார்பில் மதநல்லிணக்க பேரணியுடன் கலைநிகழ்ச்சி
X

மதநல்லிணக்க பேரணி,  எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் வந்தவாசி எம்.எல்.ஏ., அம்பேத்குமார் ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வந்தை வட்டக்கோட்டை தமிழ்ச்சங்கம் 100 வது நிகழ்வை முன்னிட்டு பறையிசை முழக்கத்தோடு அனைத்து மதத் தலைவர்கள் முன்னிலையில் மதநல்லிணக்க மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

பேரணியை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் வந்தவாசி எம்.எல்.ஏ., அம்பேத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியானது வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே தொடங்கி தேரடி பகுதி, பஜார் சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று கோட்டை மூலை அருகே சென்று முடிவடைந்தது இதைத்தொடர்ந்து மனிதநேய தமிழ் திருவிழா நடைபெற்றது.

இதில் 3 மதத்தின் குருமார்களான மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயில் சக்தி உபாசகர் லட்சுமண சுவாமிகள், பெரிய பள்ளிவாசல் ஆதம் பாஷா ஹாசினி, சி.எஸ்.ஐ. தேவாலய பேரூட்பணி தியாகராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மதநல்லிணக்க வலியுறுத்தும் வகையில் சமாதானப் புறாவை பறக்க விட்டனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பறை இசை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து வாணியம்பாடி தமிழ் பேரருவி அப்துல் காதர் கலந்துகண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கே. ஆர். சீதாபதி, மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் இந்திராராஜன், வந்தை வட்ட கோட்டை தமிழ் சங்கத் தலைவர் ரகமத்துல்லா சங்க ஆலோசகர் முருகேஷ், சங்க செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jun 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி