/* */

வந்தவாசி தாலுகாவில் டி.ஆர்.ஓ. தலைமையில் சிறப்பு மனு நீதி நாள் முகாம்

Tiruvannamalai Today News -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் டி.ஆர்.ஓ. தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

வந்தவாசி தாலுகாவில் டி.ஆர்.ஓ. தலைமையில் சிறப்பு மனு நீதி நாள் முகாம்
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.ஆர்.ஓ. பிரியதர்ஷினி மற்றும் எம்.எல்..ஏ அம்பேத்குமார் வழங்கினர்.

Tiruvannamalai Today News -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அருகம் பூண்டி, பருவதம் பூண்டி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கான மனு நீதி நாள் முகாம் நிகழ்ச்சி பெருங்கடப்புத்தூா் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த மனுநீதிநாள் முகாமில் வீட்டுமனை பட்டா , பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, குடும்ப அட்டை , வேளாண்மைத்துறை இடுபொருள், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 410 பேருக்கு ரூ. 43.32 லட்சத்திற்கான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மனுநீதி நாள் முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். செய்யாறு வருவாய் கோட்ட துணை ஆட்சியா் அனாமிகா, தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் முருகானந்தம் வரவேற்றாா். வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. அம்பேத்குமாா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.

முகாமில் 10 பேருக்கு வீட்டு மனைப் பட்டா, 26 பேருக்கு பட்டா மாற்றம், 84 பேருக்கு குடும்ப அட்டை, 151 பேருக்கு முதியோா் மற்றும் இதர உதவித்தொகை, வேளாண் துறை சாா்பில் 11 பேருக்கு விவசாயக் கருவிகள் என 410 பேருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில் வீட்டு மனை நிலம் வாங்க நினைப்பவர்கள் வாங்குவதற்கு முன்பாக நில அளவையரிடம் சென்று ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் வாங்கும் இடத்திற்கு சரியான பத்திரப்பதிவு செய்யும் தொகை செலுத்தவும் விற்பனை செய்பவரிடம் தொகை கொடுக்கவும் சரியாக இருக்கும் , இல்லை எனில் கூடுதல் தொகை கொடுத்து ஏமாற வேண்டி இருக்கும்.

நில அளவையர்கள் அளந்து பட்டா கொடுக்க தாமதம் ஆவதை தவிர்க்க அரசு தற்போது வி.ஏ.ஓ.க்களும் நிலம் அளந்து பட்டா கொடுக்க உத்தரவு வழங்கியுள்ளது.அரசு அவ்வப்போது அறிவிக்கும் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது . அதனை ஒவ்வொருவரும் உற்று கவனித்து பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுபாஷ்சந்தா், வேளாண்மை துறை உதவி இயக்குனர் குமரன் , தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்கோவன், சுந்தரேசன், பிரபு , மாவட்ட பிரதிநிதி பாரதிராஜா, தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா , ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி , ஆதிகேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 Oct 2022 9:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி