வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை

வந்தவாசி அருகே இளைஞர் ஒருவரை கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
X

இளைஞர் விஜய்.

வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஜய் (21). இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு தெள்ளாறு காவல் நிலையத்தில் விஜயின் தந்தை ஏழுமலை புகார் அளித்தார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 நபர்களிடம் விசாரணை செய்த காவல் துறையினர், தொலைபேசித் தொடர்புகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் வந்தவாசி அருகேவுள்ள சு.நாவல்பாக்கம் முருகன் கோயில் அருகே இன்று எரிக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் அது காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர் விஜய் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த எலும்புகளை தடய அறிவியல் சோதனைக்காக சென்னை மயிலாப்பூர் அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, காவல் ஆய்வாளர்கள் சோனியா உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

Updated On: 27 Jun 2022 2:57 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் சென்டர் திறப்பு
 2. குமாரபாளையம்
  வல்வில் ஓரி விழாவில் இருதரப்பினர் மோதல் வழக்கில் சமரசம்
 3. சினிமா
  தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
 4. குமாரபாளையம்
  பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
 5. குமாரபாளையம்
  மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
 6. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 7. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 8. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 10. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை