/* */

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலையில் 6 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு. காவல்துறை இணை ஆணையர் ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
X

காவல்துறை இணை ஆணையர் ராஜேஸ்வரி தேர்வு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்திலும் நடைபெற்றது. இந்த தேர்வு திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலைக்கல்லூரி, சண்முகா தொழிற்சாலை கலைக்கல்லூரி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, சிஷ்யா மெட்ரிக்பள்ளி, கரன் கலைக்கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி என 6 மையங்களில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்விற்காக 6 ஆயிரத்து 44 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் காவல் துறையில் பணியாற்றி கொண்டு இத்தேர்வில் பங்கேற்பதற்காக 602 போலீசார் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வு காலை, மதியம் என இரு வேளையாக நடைபெற்றது. காலையில் நடந்த பொதுத்தேர்வை 5 ஆயிரத்து 442 பேரும், மதியம் நடந்த தமிழ் தகுதி தேர்வை 5 ஆயிரத்து 954 பேரும் எழுதினர்.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. திருவண்ணாமலை மாவட்ட தேர்வு கண்காணிப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட சென்னை மேற்கு காவல்துறை இணை ஆணையர் ராஜேஸ்வரி தேர்வு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தார். தேர்வு பாதுகாப்பு பணியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 700 போலீசார் ஈடுபட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) துறை சார்ந்து விண்ணப்பித்த போலீசாருக்கான எழுத்து தேர்வு அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

Updated On: 26 Jun 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?